காவி நோய்களுள் இலங்கையில் டெங்கு நோய் முக்கிய இடத்தினை வகிப்பதுடன் முதல் தடவையாக ஆய்வுகூடப் பரிசோதனை மூலம் டெங்கு நோயென உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளி 1962ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டார். டெங்கு கொள்ளை நோய் நிலைமை1965 – 1966 ஆம் ஆண்டுகளில் பதிவாகியதுடன் டெங்கு குருதிப்பெருக்கு நோயாளர்கள் சிலர் அங்கு காணப்பட்டனர். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 1970 மற்றும் 1980 ஆம் தசாப்தங்களில் டெங்கு நோய் பரவுதல் தொடர்ந்து இடம்பெற்றுள்ளதுடன் கொள்ளை நோய் நிலைமைகள் ஒரு சில காலகட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இக் காலகட்டத்தில் தீவிர டெங்கு நோய் நிலைமைகளான டெங்கு குருதிப்பெருக்கு டெங்கு அதிர்ச்சி நிலைமைகள் மிக அபூர்வமாகவே நிகழ்ந்துள்ளன.
மேலும் 1980 -1985 ஆம் ஆண்டுகளில் வைரஸ் நோய் நிலைமைகளுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொண்ட நோயாளர்களுள் 14% - 24% மான எண்ணிக்கையான நோயாளர்களது நோய் நிலைமைகள் டெங்கு வைரஸ் தொற்றியமையினால் ஏற்பட்டுள்ளதாகவும் 4 வகையான வைரஸ்கள் இக் கால கட்டத்தில் இலங்கையில் பரவிச் சென்றதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவ்வாறே டெங்கு 2 மற்றும் டெங்கு 3 என்ற வகையான வைரஸ்கள் பெருமளவிலான நோயாளர்களிடம் காணப்பட்டதாக இனங்காணப்பட்டுள்ளன.
முதற்றடவையாக டெங்கு வைரஸ் வகை 3 காரணமாக டெங்கு குருதிப்பெருக்கு மற்றும் டெங்கு இல் பதிவாகியது. டெங்கு வைரஸ் வகை 3 இலங்கையில் பரவி பல வருடங்களின் பின்னர் இவ்வாரான ஒரு நிலைமை டெங்கு வைரஸ் வகை 3 இடம்பெற்ற உயிர்மத்தின் மாற்றம் காரணமாக ஏற்பட்டதென ஊகிக்கப்படுகிறது. அதிலிருந்து குறிப்பிட்ட கால எல்லைகளில் படிப்படியாக நோயளர்களின் எண்ணிக்கையில் ஓர் அதிகரிப்பு மற்றும் மிகத் தீவிரமான டெங்கு குருதிப்பெருக்கு மற்றும் அதிர்ச்சி நிலைமையுடனான கொள்ளை நோய் நிலைமைகள் இலங்கையில் பதிவாகின.
இந் நிலைமைகளின் கீழ் 1996 ஆம் ஆண்டு டெங்கு நோயானது கட்டாயமாக அறிவிக்கப்பட வேண்டிய நோய்ப் பட்டியலின் கீழ் உள்ளடக்கப்பட்டது