கடந்த சில தசாப்தங்களாக டெங்கு நோய் மிக விரைவாக உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. சுமார் 2.5 பில்லியன் மக்கள் வாழும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சுமார் நூறு நாடுகளில் (இலங்கை உட்பட) நகர மற்றும் பகுதியளவில் நகர பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப் பெருக்கு தொற்றும் அபாயம் காணப்படுகிறது.