டெங்கு நோய் என்பது ஒரு வைரஸ் தொற்று நோய் நிலைமை என்பதுடன் இந் நோய் ஒன்றோடொன்று மிகவும் சமமானதாயினும் ஒவ்வொரு வைரசும் நோயினைப் பரப்பக் கூடிய நோய்க் காவியாக தொழிற்படுகின்ற 4 வகையான வைரஸ்கள் மூலமாகவே பரப்பப்படுகிறது. (DEN 1, DEN 2, DEN 3, DEN 4) ஈடிஸ் வகைக்குட்பட்ட நோய் தொற்றுள்ள பெண் நுளம்பின் மூலமாகவே இவ் வைரஸ் மனிதர்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது. டெங்கு நோயின் அடைகாப்புக் காலம் (வைரஸ் தொற்றிய தினத்திலிருந்து நோய் அறிகுறிகளைக் காட்டும் தினம் வரையான காலம்) 3 தொடக்கம் 14 தினங்கள் வரையாகும்.
டெங்கு நோயின் பிரதான நோய் அறிகுறிகளாவன கடுமையான காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களின் பின்புறத்தில் வலி, எழும்புகள் மற்றும் தசைகளில் வலி, மூட்டு வலி, குமட்டல், வாந்தி, உடம்பில் கொப்புளங்கள் மேற்படல், சிறிய குருதி வடியும் நிலைமைகள் (முரசினால், மூக்கினால்)
டெங்கு குருதிப்பெருக்கு என்பது சாதாரண டெங்கு நோயை விடவும் தீவிரமான ஒரு நோய் நிலைமை ஆவதுடன் இங்கு 2-7 வரையான காலத்திற்கு காய்ச்சல் நிலவக்கூடும். சாதாரண டெங்கு நோய் நிலைமையின் போது ஏற்படும் நோய் அறிகுறிகளுக்கு மேலதிகமாக இந்நோயாளிகளிடம் கடுமையான வயிற்று வலி, தடையின்றிக் காணப்படும் வாந்தி மற்றும் சுவாதிப்பதில் சிறமம் என்பன ஏற்பட இடமுண்டு. சிறு குருதிக்கலன்களுக்குள் நிகழும் சில மாற்றங்கள் காரணமாக குருதியின் திரவவிழையப் பகுதி குருதிக்கலன்கள் மூலமாக நெஞ்சு, வயிற்றுக் குழியினுள்ளே கசியக் கூடும். இந் நிலைமை பெரும்பாலும் 24 – 48 மணித்தியாலங்களுக்கு வரையறுக்கப்படுவதுடன் அபாய நிலைமையென அழைக்கப்படுகிறது. இவ்வாறு குருதியின் திரவவிழையம் குருதிக்கலன்களினூடாக வெளியில் கசிவதன் காரணமாக குருதிப் பரும அளவில் ஒரு குறைவும் குருதி உறைதலும் ஏற்படுவதுடன் மூளை, சிறுநீரகம், ஈரல் போன்ற அத்தியவசிய அவயவங்களுக்கு வழங்கப்படும் குருதியின் அளவு குறைவடையும். இதன் காரணமாக குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு நோயாளி அதிர்ச்சி நிலைமைக்குட்படக் கூடும். இந் நிலைமையினை அடைய முன்னர் இனங்கண்டு சிகிச்சையளிக்கப்படா விடின் நோயாளி மரணிக்கவும் இடமுண்டு.
டெங்கு குருதிப்பெருக்கு என்பது சாதாரண டெங்கு காய்ச்சலை விடவும் தீவிரமான நோய் அறிகுறிகளைக் காட்டும் ஒரு நோய் நிலைமையாகும் என்பதுடன் இங்கு பிரதானமாக வெளியில் திரவவிழையம் கசிவினைக் காணக் கூடியதாயிருக்கும். உரிய நேரத்தில் மற்றும் உரியவாறு சிகிச்சை வழங்கப்படாவிடின் பயங்கரமான விளைவுகள் ஏற்பட முடியும். டெங்கு குருதிப்பெருக்கு நோயை பரப்புவதும் டெங்கு காய்ச்சலை பரப்புகின்ற வைரஸ் ஆகும்.
வைரஸ் தொற்றியுள்ள ஈடிஸ் வகை பெண் நுளம்பு மனிதர்களின் குருதியினை உரிஞ்சுகின்ற வேளையில் உடம்பிற்குள் உட்செல்லும் டெங்கு வைரஸ் மூலம் டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு குருதிப்பெருக்கு என்பன மனிதர்களைத் தொற்றுகின்றன. டெங்கு நோயாளியைக் கடிக்கும் போது நோயாளியின் உடம்பிலுள்ள வைரஸ், நுளம்பினுள் உட்செலுத்தப்படுவதன் காரணமாக நுளம்பு டெங்கு நோய் தொற்றிய நுளம்பாக மாறுகிறது. வைரஸ் உடம்பிற்குள் நுழைந்து சுமார் ஒரு வாரத்திற்குள் மற்றுமொரு சுகதேகியான ஒரு நபருக்கு நோயைப் பரப்பச் செய்யக் கூடியவாறு நுளம்பானது நோய்தொற்று நிலைமைக்கு மாறுகிறது. டெங்கு நோய் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தொற்றாது.
டெங்கு நோய்க்கான விசேட சிகிச்சைகள் இல்லாத போதும் நோய் நிலைமைகளை முன்னரே இனங்கண்டு சேலைன் போன்ற தேவையான நரம்புகளூடாக செலுத்தப்படுகின்ற திரவங்களை வழங்குதல் மற்றும் குருதிப் பரிசோதனையினை மேற்கொள்ளல் உள்ளிட்ட தேவையான கவனிப்புக்களைப் புரிவதன் மூலம் நோயின் சிக்கல் தன்மையினை குறைத்துக்கொள்ள முடியும். டெங்கு நோயென சந்தேகிக்கப்படும் வேளையில் காய்ச்சல் மற்றும் வலியினை போக்குவதற்காக பெரசிட்டமோல் உரிய அளவு வழங்க முடியும். ஆயினும் ஏனைய நோய் நிவாரண மருந்துகளை எவ்விதத்திலும் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதுடன் உடலை களைப்படையச் செய்யும் எதுவித செயற்பாட்டினையோ உடற்பயிற்சியினையோ மேற்கொள்வதைத் தவிர்த்து தேவையான அளவு ஓய்வெடுத்தல் வேண்டும்.
தேவையான அளவு திரவ வகைகளைப் பருகுவதுடன் இரண்டு தினங்களுக்கு மேலாக காய்ச்சல் காணப்படும் சந்தர்ப்பங்களில் தகுதிவாய்ந்த ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ச்சியான வாந்தி, கடுமையான வயிற்று வலி, தலைசுற்று, சுவாசிப்பதிலுள்ள அசௌகரியம் அல்லது வேறேதும் கவலைக்கிடமான நோய் அறிகுறிகள் காணப்படின் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பது அத்தியவசியமாகும்
Given below is a list of chemicals that are registered under the Registrar of Pesticides that can be used as effective mosquito repellents.
Trade Name | Active Ingredient and Strength | Imported Company | Registration Status |
Category (RES/GEN/DOME) |
Mino 8 | Ethylbutyl acetylaminopropionate 80g/L | George Steuart Health (Pvt) Ltd. | Repellent | Domestic |
Soffell | N, N-diethyl-m-toluamide 13% | Rattan Merchant | Repellent | Domestic |
Soffell Spray | N,N-diethyl-m-toluamide 13% | Rattan Merchant | Repellent | Domestic |
Moso | Icaridin 20% (w/w) | EB Creasy Co. & Plc. | Repellent | Domestic |
நுளம்புகள் பரவக்கூடிய/ பரவும் இடங்கள் தொடர்பாக முறைப்பாடுகளைச் செய்வதற்கு முன்னர் இவ் இடத்தின் உரிமையாளர் அல்லது பொறுப்பான நபர்களுடன் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டுக்கு வருவது மிக முக்கியமாகும். அதன் போது திருப்திகரமான பதில் கிடைக்கப்பெறாவிடின் உங்கள் பிரதேசத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர் மற்றும் சுகாதார வைத்திய உத்தியோகத்தர் உள்ளிட்ட பிரதேசத்திலுள்ள நகரசபை/ பிரதேச சபை/ என்பவற்றுக்கு முதலாவதாக அறிவித்தல் வேண்டும்.