socialmob

டெங்கு ஒழிப்பு மற்றும் தடுத்தல் என்பவற்றைத் தடையின்றி பேணிச் செல்வதற்காக மக்களை முனைப்படையச் செய்யும் செயன்முறைகளை வலுவடையச் செய்தல்

  • நுளம்பு ஒழிப்பு வாரங்களை பிரசித்தப்படுத்தல், ஊடக கூட்டங்களை நடாத்துதல் மற்றும் நுளம்பு ஒழிப்பு வாரத்துடன் இணைந்ததாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தொடர்பில் வசதி செய்து கொடுத்தல்.
  • சுகாதாரக் கல்விக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தல்.
  • இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் நுளம்புகள் பரவும் இடங்கள் பற்றியும் அவற்றை அகற்றுதல் பற்றியும் மக்களுக்கு அறிவூட்டுதல்.

தொடர்பாடல் மூலம் நடத்தை சார்ந்த மாற்றமொன்றை ஏற்படுத்துதல் 

டெங்கு ஒழிப்புக்கான செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அவசரமாக டெங்கு நோயாளர்களை இனங்கண்டு தேவையான சிகிச்சைகளை வழங்குதலும் வீடுகள், அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் ஏனைய இடங்களில் டெங்கு நுளம்புகள் பரவும் இடங்ளை இல்லாதொழித்தல், அகற்றுதல் மற்றும் நுளம்புக் கடியிலிருந்து விலகியிருத்தல் என்பன முக்கியம் பெறுகின்றன. 

உலக சுகாதார நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஒரு முறைமையான தொடர்பாடலினூடாக நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துதல் இச் சவாலினை விட்டு விலகி தனி நபரிடமும் மக்களிடமும் குறிப்பிடத்தக்க நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்கிறது. 

இதன் மூலம் தனிநபர்களிடம் நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்கு உபயோகிக்கப்படும் பல்வேறு தொடர்பாடல் முறைமைகளைத் திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பவற்றை மேற்கொள்ள முடியும்.

இலக்கு குழுக்கள் மற்றும் அவர்களிடத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடத்தை சார் மாற்றத்தை இனங்கண்டு அவர்களுக்குப் பொருத்தமான செய்திகளை குறிப்பிட்ட கால எல்லைக்குள் அடிக்கடி பார்வையிடுவதற்கும் செவிமடுப்பதற்கும் வழிவகுப்பதே தொடர்பாடலினூடாக நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்தும் முறைமையின் பிரதான நோக்கமாகும். (விசேடமான, அளவிடக்கூடிய, ஏற்புடைய, நிறைவேற்ற முடியுமான, காலத்துக்குப் பொருத்தமான ஒரு நோக்கமாக அமைதல் வேண்டும்)

  • விசேடமான: இலக்கு குழுக்கள் மற்றும் இலக்கு வைக்கும் நடத்தை யாது என்பது
  • அளவிடக்கூடிய: நடத்தை மாற்றத்தினை அளவிடக்கூடியதாயிருத்தல் ( எத்தனை சதவீதத்தினால் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதென்பது) 
  • ஏற்புடைமை: தேவைக்குப் பொருத்தமானதாயமைதல் வேண்டும்.
  • நிறைவேற்ற முடியுமான: நிறைவேற்ற முடியுமானதாயிருத்தல் வேண்டும்
  • காலத்துக்குப் பொருத்தமான : குறிப்பிட்ட காலஎல்லையினுள் நிறைவேற்றக்கூடியதாயிருத்தல் வேண்டும்

தொடர்பாடலினூடாக நடத்தை சார் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அர்த்தமுள்ள அப் பணிக்காக மாத்திரம் தயாரிக்கப்பட்ட தொடர்பாடல் செயற்பாடுகளை இலக்கு குழுக்களிலிருந்து பொருத்தப்பாட்டினைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்துதல் 

ஆரம்ப நோக்கங்களைக் கட்டியெழுப்பும் போது ஒவ்வொரு குழுவிற்குமாக உத்தேச செயற்பாட்டுக்கான விதந்துரைகளை கவனத்திற் கொள்தல் வேண்டும்.

  • நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு எக் குழுவிலிருந்து நடத்தை சார் மாற்றம் எதிரபார்க்கப்படுகிறது? 
  • இலக்கு குழு யாது? 
  • மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் யாவை? நிறைவேற்ற முடியுமா? பயனுள்ளதா என்பன பற்றி.
  • தற்போது அச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமைக்கான காரணங்களும் அது தொடர்பாகவுள்ள தடைகளும் பலமும்
  • எவ் விதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதால் நடத்தையில் மாற்றத்தினை ஏற்படுத்துவது தொடர்பில் கூடுதலான பங்களிப்புச் செய்ய முடியும்? 
  • இச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான பொருட்கள்/ சேவை வசதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் கணப்படுகிறதா? இலகவில் பெற்றுக் கொள்ள முடுயுமா? இல்லையேல் என்ன செய்ய வேண்டும்? 

தற்போது டெங்கு ஒழிப்புக்காக பயன்பாட்டிலுள்ள நோக்கங்கள், இலக்கு குழுக்கள், மற்றும் பிரதான தொடர்பாடல் செய்திகள் கி்ழ் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தொடர்பாடல் நோக்கங்களும் இலக்கு குழுக்களும்

  1. குடும்பத் தலைவிமார்களை இலக்காக கொண்டு வாரத்திற்கொரு முறை வீட்டையும் வளவையும் சுத்தப்படுத்துவதனூடாக சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவில் 80 – 90% அளவு வளவினை உள்ளடக்குதல்.
  2. ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் பாடசாலையில் நுளம்புகள் பரவும் இடங்களை அகற்றுவதற்கு/ ஒழி்ப்பதற்கு அதிபர்களுக்கும் ஆசியர்களுக்கும் அறிவூட்டுவதன் மூலம் 80% - 90% மான பாடசாலைகளை நுளம்புகள் பரவாதவாறு பேணிச் செல்லல்.
  3. அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் “டெங்கு ஒழிப்புக் குழுக்களை” நிறுவி வாரத்திற்கொரு முறை நுளம்புகள் பரவும் இடங்களை அகற்றுவதற்கு/ ஒழி்ப்பதற்கு நடவடிக்ைக மேற்கொள்ளல்
  4. இரண்டு நாட்களுக்கு மேலாக காய்ச்சல் காணப்படும் வேளைகளில் தகுதிவாய்ந்த ஒரு வைத்தியரிடம் சிகச்சை பெற்றுக்கொள்வதற்காக மக்களைத் தூண்டுதல்

முக்கியமான செய்தி

  1. ஒவ்வொரு ஞாயிறும் 30 நிமிடங்கள் தமது வீட்டிலும் சூழலிலும் நுளம்புகள் பரவும் இடங்களை கண்டறிந்து அகற்றவும்/ அழித்து விடவும்
  2. ஒவ்வொரு வௌ்ளிக்கிழமையும் 30 நிமிடங்கள் உங்களது பாடவாலை வளவில் நுளம்புகள் பரவும் இடங்களைப் பரீட்சித்து அகற்றவும்/ அழித்து விடவும்
  3. இரண்டு தினங்களுக்கு மேலாக காய்ச்சல் காணப்படும் போது தகுதிவாய்ந்த ஒரு வைத்தியரிடம் சிகச்சை பெற்றுக்கொள்ளவும்
  4. காய்ச்சலைக் குணப்படுத்துவதற்காக பெரசிட்டமோல் மாத்திரையினை மட்டும் உரிய அளவில் உட்கொள்ளவும். ஏனைய மாத்திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.

கட்டட நிர்மாண வளவுகளிலுள்ள நுளம்புகள் பரவும் இடங்களை அடிக்கடி பரீட்சிக்கவும்