inner others news

இலங்கையில் தற்போது 140 வகையான நுளம்பு இனங்கள் காணப்படுவதுடன் ஈடிஸ் ஈஜிப்டை மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ் ஆகிய இரண்டு நுளம்பு வகைகள் மாத்திரம் டெங்கு நோய் வைரஸை பரப்புவதில் பங்களிப்புச் செய்கிறது. இவ் இரண்டு நுளம்பு வகைகளை அவற்றின் உடம்பில் காணப்படும் அடையாளம் காரணமாக இலகுவில் இனங் காணலாம்.

Picture14 AE Picture14 AA
Aedes aegypti Aedes albopictus
mosquito

 

Shown below is the life cycle of the Aedes mosquito.

Life Cycle

life cycle3

ஈடிஸ் நுளம்புகளின் வாழ்க்கைச் சக்கரத்தில் நீரியல் சந்தர்ப்பம் (முட்டை, குடம்பி, கூட்டுப்புழு) மற்றும் தரைச் சந்தர்ப்பம் (நிறைவுடலி) என்பன காணப்படுவதுடன் பெண் நுளம்புகள் நீருடன் கூடிய கொல்கலன்களில் நீர் மட்டத்திற்கு சற்று மேலே ஈரலிப்பான மேற்பட்டையில் முட்டையினை (படம் 1) ஒட்டுவதுடன் அம் முட்டை நீருடன் மோதுகின்ற போது (மழை அல்லது வேறு ஒரு முறையினால் நீர் ஒன்றுசேர்தல் மூலம்) முட்டைகள் வெடித்து குடம்பி சந்தர்ப்பமாக (படம் 2) மாறும். இந் நுளம்பு குடம்பிகள் நீரிலுள்ள கூட்டுப்பொருள் மற்றும் சிறிய நுண் அங்கிகள் என்பவற்றை உணவாக உட்கொண்டு 1ஆம் குடம்பி சந்தர்ப்பம் முதல் 4ஆம் குடம்பி சந்தர்ப்பம் வரை வருகின்றன. குடம்பியானது தேவையான உடல் பருமனை அடைந்ததன் பின்னர் மற்றும் தேவையான சக்தினைப் பெற்றுக்கொண்ட பின்னர் 4ஆம் குடம்பி சந்தர்ப்பத்திலிருந்து கூட்டுப்புழு (படம் 3) சந்தர்ப்பத்திற்கு மாற்றமடைகிறது. இவ் வழ்க்கைச் சக்கரத்தினைப் பூரணப்படுத்துவதற்காக 8-10 தினங்கள் செலவழிப்பதுடன் இது குடம்பி தனது உணவு உட்கொள்ளும் அளவு மீது தங்கியுள்ளது.

ஈடிஸ் நுளம்பின் முட்டைகளுக்கு பாதகமான சூழல் மற்றும் காலநிலை நிலைமைகளினைப் பொறுத்துக்கொண்டு பல மாதங்கள் சாகாமல் வாழ்வதற்குரிய விசேட ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் இதன் காரணமாக நுளம்பின் குடம்பி சந்தர்ப்பம், கூட்டுப்புழு சந்தர்ப்பம் மற்றும் நிறைவுடலி சந்தர்ப்பங்கள் அழிக்கப்பட்டாலும் நுளம்பின் முட்டைகள் தேங்கியுள்ள கொல்கலனொன்றில் நீர் விழுந்ததும் முட்டை வெடித்து மீண்டும் நுளம்புகள் பெருகக் கூடிய ஆற்றல் காணப்படுகிறது. துரதிஷ்டவசமாக கொல்கலன்களில் ஒட்டியுள்ள முட்டைகளை அழிப்பதற்கான விசேடமான ஒரு முறைமை காணப்படவில்லை. நுளம்பின் வாழ்க்கைச் சக்கரத்தில் காணப்படும் இவ்வாறான இயல்புகளின் மாற்றங்களின் காரணமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் டெங்கு நுளம்புகளை இல்லாதொழித்தலானது இலகுவான காரியமல்ல.