inner others news

காய்ச்சல் காணப்படின்...

  1. நோயாளிக்கு ஓய்வு வழங்கவும்
  • கஷ்டப்படவோ பாரமான வேலைகள் செய்யவோ இடமளிக்க வேண்டாம்
  1. திரவ வகைகளை பருக கொடுக்கவும்
  • பால், பழச்சாறு, தோடம்பழச்சாறு, ஜீவனீ, தெம்பிலி, சூப் போன்றன பொருத்தமானதாகும்.
  • நீரை மட்டும் அருந்தச் செய்ய வேண்டாம்
  • சிவப்பு அல்லது கபில நிற பாண வகைகளைக் குடிக்கச் செய்ய வேண்டாம். உதா – சிவப்பு நிற குளிர்பாணம், கோப்பி
  • வழக்கமான திண்ம உணவுகளை உட்கொள்ள முடியுமாயின் அவற்றை வழங்கவும்.
  1. நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை பற்றி கவனத்திற் கொள்ளவும்.
  • நோயாளி சிறுநீர் கழிக்கும் தடவைகளின் எண்ணிக்கை குறைவாயிருப்பின் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும்.
  1. காய்ச்சல் காணப்படின்
  • சாதாரண நீரினால் மேணியை நனைக்கவும்
  • பெரசிட்டமோல் (Paracetamol) உரிய அளவு 6 மணித்தியாலத்திற்கொரு முறை வழங்கவும்.(பிள்ளைகளுக்காக உரிய அளவினை எடைக்கு ஏற்ப வழங்கவும்/ வயது வந்தோருக்கு 1 கிராம்)
  • காய்ச்சலுக்காக வழங்கப்படும் ஏனைய மருந்து வகைகளை (விசேடமாக கடுமையான காய்ச்சலுக்கு வழங்கப்படும் மருந்துகள்) வழங்க வேண்டாம்.
  • உதா-: Diclofinac/ Ibuprofen/Mefenamic Acid – Tablets / Syrups
  1. காய்ச்சல் 2 நாட்களுக்க மேலாக காணப்படின்
  • 3 ஆவது தினத்தில் குருதிப் பரிசோதனையொன்றை மேற்கொள்ளவும்.
  1. பின்வரும் அறிகுறிகள் காணப்படின் நோயாளியை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கவும்
  • திரவ வகைகளைப் பருக முடியாதிருத்தல் (அடிக்கடி வாந்தயெடுத்தல்)
  • உணவு, பாண வகைகளை நிராகரித்தல்
  • கடுமையான தாகம்
  • நோயாளி சிறுநீர் கழிக்குமட தடவைகள் குறைவடைதல் ( 6 மணித்தியாலத்திற்கு கூடுதலான நேரத்திற்குள் சிறுநீர் வெளிவராமை)
  • கடுமையான வயிற்று வலி
  • தூக்க நிலைமை
  • நடத்தையில் மாற்றம் ஏற்படல்
  • சிவப்பு/ கறுப்பு/ கபில நிற வாந்தியெடுத்தல்
  • கறுப்பு நிற மலம் வெளியாதல்
  • குருதிப்பெருக்கு (முரசுகளிலிருந்து குருதிப்பெருக்கு, சிறுநீர் சிவப்பு நிறத்தில் வெளியாதல்)
  • தலைசுற்றுதல்
  • கைகால்கள் குளிரடைதல்